இந்தியா
இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை வடிவமைக்க உள்ளது – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்..!
இந்தியா தனது முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை வடிவமைக்க உள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
ஒடிசா வந்திருந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புவனேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பேசியது:- இந்தியாவின் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் முதல் ரயிலை உள்நாட்டிலேயே தயாரித்து, அடுத்தாண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெள்ளோட்டம் பார்க்கப்படும். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும். இதனை வடிவமைப்பதற்காக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ள. இவ்வாறு அவர் கூறினார்.
உலகிலேயே ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பயணிகள் ரயில் சேவையை முதல்முறையாக ஜொ்மனி கடந்த மாதம் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...