மேற்கத்திய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முன்னேறும் இந்தியா – இந்தியாவுக்கான ரஷிய தூதர்.!

உள்ளூர் செய்திகள்

மேற்கத்திய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முன்னேறும் இந்தியா – இந்தியாவுக்கான ரஷிய தூதர்.!

மேற்கத்திய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முன்னேறும் இந்தியா – இந்தியாவுக்கான ரஷிய தூதர்.!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான ரஷியாவின் போரால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் போரை தவிர்க்கும் நடவடிக்கையாக, ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும், ஐரோப்பிய நாடுகளுக்கு தனது எரிவாயு சப்ளையில் சுணக்கம் காட்டி மறைமுக பழிவாங்கலில் ஈடுபட்டு வருகிறது.

இதேபோன்று ரஷியா, எங்களது மிக பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது என்றும் அதன்வழியே போதிய வர்த்தகம் நடைபெறும் என்றும் கூறியிருந்தது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தடையை நீர்த்து போக செய்யும் வகையிலான பதிலாக அமைந்தது.


இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பற்றிய கேள்விக்கு இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஐரோப்பிய நாடுகளுடன் பாரம்பரியம் ஆக வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், அதன் தடை எதிரொலியாக புதிய சந்தைகளை ரஷியா எதிர்பார்க்கிறது. ஒரு நுகர்வோராக, இந்தியா மிக குறைந்த விலையிலான சலுகைகளை இயல்பாகவே எதிர்பார்க்கிறது.

இந்த துறையில் எங்களுடைய நல்லுறவை தொடர்ந்து விரிவாக்க முயன்று வருகிறோம். நீண்டகால ஏற்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தொடர்ந்து நடந்து வரும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவித்து இருதரப்பு உறவுகளை விரிவாக்கம் செய்து வருகிறோம்.

ரஷியா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் சக்திகள், முன்னணி நிலையை தக்க வைத்து கொள்வதற்காகவும், தனித்துவமுடன் இருப்பதற்காகவும் உலக பொருளாதாரத்தில் மேற்கத்திய நாடுகளை விட சிறந்த முறையில் முன்னேற தொடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...