ஓணம் பண்டிகை : கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப்புகழ்பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி..!

இந்தியா

ஓணம் பண்டிகை : கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப்புகழ்பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி..!

ஓணம் பண்டிகை : கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப்புகழ்பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி..!

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை தொடர்ந்து 10 நாட்கள் நீண்ட பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கம். சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் கேரளாவின் புகழ்பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி வெகுவிமரிசையாக தொடங்கியுள்ளது. படகுப்போட்டியை காண ஏராளமான பாரவையாளர்கள் குவிந்துள்ளனர். கேரளாவின் புகழ்பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் 68-வது ஆண்டு படகு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இந்த படகு போட்டியை இன்று முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு நடைபெறும் படகுப்போட்டியில் 72 சிறிய படகுகள் கலந்து கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் 20 பெரிய படகுகளும் இந்த படகுப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளது. இந்த போட்டிகளை காண கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் ஆலப்புழாவில் குவிந்துள்ளனர்.

இன்று காலை தொடங்கிய இந்த படகுப்போட்டி மாலை வரை நடைபெற உள்ளது. இதில் இறுதி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிக்கு நேரு கோப்பை நினைவு பரிசாக வழங்கப்பட உள்ளது..

இந்தப் போட்டியில் கேரளா போலீசாரின் அணியும் கலந்து கொள்வது என்பதும் குறிப்பிடத்தக்கது. 40 லட்சம் ரூபாய்க்கு மேலாக படகு போட்டி டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக ஆலப்புழா கலெக்டர் தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும் வந்துள்ளதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave your comments here...