சீனாவில் மீண்டும் கொரோனாவின் புதிய அலை – மக்கள் வெளியேற தடை.!
கொரோனாவின் புதிய அலை சீனாவில் மீண்டும் எழுந்துள்ளதால் செங்டு நகரை சேர்ந்த 2.1 கோடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் தென்மேற்கு நகரமான செங்டுவில் புதிய கொரோனா அலை தொற்று வேகமாக பரவி வருகிறது. அதையடுத்து அந்நகரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முந்தைய 24 மணி நேரத்தில் கொரோனா நெகடிவ் சோதனை ரிசல்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் என்றும், அவர்கள் மூலமே மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படும் என்று உள்ளூர் சுகாதார நிர்வாகம் அறிவித்துள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், நகரத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘செங்டு நகரத்தில் புதியதாக 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனா முழுவதும் குறைந்தது 10 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. செங்டு நகரத்தில் மட்டும் 21 மில்லியன் (2.1 கோடி) மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர். முன்கூட்டியே புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால், மளிகை கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Leave your comments here...