சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!
சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 37 லட்சம் ரூபாயை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேற்கு வங்கம், நியூ ஜல்பைகுரி சந்திப்பில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, நேற்று பிற்பகல் 2:40 மணிக்கு அதிவிரைவு ரயில் வந்தது.
அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதுசூதன் ரெட்டி, எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், காவலர்கள் சந்தீப், ரஞ்சித் ஆகியோர், ரயிலில் இருந்து சந்தேகத்துக்கிடமான வகையில் இறங்கிய நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சோதனை செய்தனர். இதில், அவரது பையில் இருந்து 20 லட்சம் ரூபாயும், ஆடையில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டு கட்டுகள் சிக்கின.விசாரணையில், மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஆனந்தராவ் ஷிண்டே, 30, என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரி பாலசுப்ரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்
Leave your comments here...