அயோத்தியில் ராமர் கோவில் – அடுத்தாண்டு டிசம்பரில், மக்கள் தரிசனம் செய்யலாம்.!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி, 40 சதவீதம் வரை முடிந்துள்ளது. அடுத்தாண்டு டிசம்பரில், கோவிலில் மக்கள் தரிசனம் செய்யலாம்’ என, கோவில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடக்கின்றன.கடந்த 2020 ஆக., 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து கட்டுமான பணி நடந்து வருகிறது.
இது குறித்து கோவில் கட்டுமானத்தை கவனிக்கும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:கோவில் கட்டுமான பணி திட்டமிட்ட வேகத்தில் நடந்து வருகிறது. இதுவரை, 40 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
அடுத்தாண்டு டிசம்பரில் மக்கள் தரிசனம் செய்யலாம்.கோவில் கட்டுமானத்துக்கான நிதியில் எந்தப் பிரச்னையும் இல்லை. மகாலட்சுமி உடன் இருக்கையில், கடவுளுக்கான இந்தப் பணியில் பணம் ஒரு பிரச்னையாக இருக்க முடியுமா?ராமர் கோவில் கட்டுமான பணிகளுடன், வளாகத்தை சுற்றி பல சிறிய கோவில்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் சாலை விரிவாக்கப் பணிகளும் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...