மாட்டு சாணத்தில் தயாரிக்கும் உயிரி வாயு ஆலை தொடங்கிய HPCL..!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனம் ஹெச்பிசிஎல், ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோரில், மாட்டு சாணத்தைக் கொண்டு உயிரி வாயு தயாரிக்கும் திட்டத்திற்கான பணியை இன்று தொடங்கியுள்ளது.
கழிவிலிருந்து மின்சாரம் என்னும் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல்-ன் முதல் திட்டம் இதுவாகும். உயிரி எரிவாயு தயாரிக்க இந்த நிலையத்தில் தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும். இதிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம். இத்திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்.
HPCL held Ground Breaking Ceremony on 22 Aug.'22 for a 100 TPD Dung based, Waste to Energy CBG Plant, under GoI's GOBAR Dhan Scheme at Shree Godham Mahatirth Pathmeda Lok Punyarth Nyas, Sanchore in Rajasthan.@HardeepSPuri @Rameswar_Teli @Secretary_MoPNG @PetroleumMin pic.twitter.com/KrfTQvL6R9
— Hindustan Petroleum Corporation Limited (@HPCL) August 22, 2022
இந்தத் திட்டத்திற்கான பூமி பூஜை, ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் பத்மேடா கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். உயிரி கழிவுகள், கால்நடைகளின் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும், கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின்படி, மத்திய அரசு தொடங்கியுள்ள கோபர்தன் திட்டத்தின்கீழ், இந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
Leave your comments here...