“நம்ம ஊரு சூப்பர்” தூய்மை குறித்து விழிப்புணர்வு – முறையாக குப்பைகளை அகற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்..!
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி, ஒன்றியத்துக்கு உட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” தூய்மை குறித்து விழிப்புணர்வு பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மேற்கொண்டார்.
அப்போது, சாலைகளிலும், சாக்கடைகளிலும் தேங்கியிருக்கும் நெகிழிப்பைகளை கண்டு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் நெகிழிப் பைகளை குப்பை தொட்டிகளில் முறையாக போட வேண்டும் என அறிவுரை கூறினார். தொடர்ந்து, அடுத்து மழைக்காலங்கள் வருவதால் தொட்டிகள், பயன்படுத்தாமல் இருக்கும் உரல், மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு நோய்கள் வராமல் தடுப்பதற்கு இதனை முறையாக அப்புற படுத்திஅகற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் மாதம் மழை காலம் முதல் டெங்கு சீசன் வந்துவிடும். தற்போது, வரை 81 பேர் டெங்கு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறினார்.
இதனைதொடர்ந்து, தூய்மை பணியாளர்களும் அதிகாரிகளும் முறையாக செயல்படுத்தி குப்பைகளை எடுக்கவில்லை என்றால் “உங்கள் ஊர் எப்பவுமே சூப்பராக” வராது என, மாவட்ட ஆட்சியர் அதிகாரியிடம் கூறினார். மேலும், முறையாக குப்பைகளை கடைகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஆய்வு பணியில், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் பார்த்திபன், வட்டார அலுவலர் ராமர் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் தனசேகரன், வட்டார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் வலையங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துப்பிள்ளை பெருமாள் , துணைத் தலைவர் போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave your comments here...