டோமினோஸ் பீட்சா கடையில் சுகாதாரமின்றி வைக்கப்பட்ட பீட்சா மாவு – வைரலாகும் புகைப்படம்..!
பெங்களூருவில் பீட்சா உணவகத்தில், பீட்சா மாவு வைக்கப்பட்டிருந்த டிரே அருகே கழிவறை சுத்தம் செய்யும் பிரஷ் மற்றும் மாப் தொங்க விடப்பட்டிருப்பதாக புகைப்படத்துடன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோஸ் பீட்சா கடையில் பீட்ஸா தயாரிக்கப்படும் மாவு டிரே சுகாதாரமில்லாமல் இருக்கும் புகைப்படத்தை நெட்டிஸன் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த மாவு டிரே மீது, தரையைத் துடைக்க உதவும் பிரஷ், கழிவறையை சுத்தம் செய்யும் பிரஷ், போன்றவை இருந்தது.
Photos from a Domino's outlet in Bengaluru wherein cleaning mops were hanging above trays of pizza dough. A toilet brush, mops and clothes could be seen hanging on the wall and under them were placed the dough trays.
Please prefer home made food 🙏 pic.twitter.com/Wl8IYzjULk
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) August 14, 2022
இந்தப் புகைப்படங்களை ஷாகில் கர்நானி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ” இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸாக்கள் புத்தம் புது பீட்ஸாகளா தயாரிக்கப்படுகிறாதா” எனத் தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளனர்.
டோமினோஸ் விளக்கம்: “பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமான முறையிலும் நாங்கள் பீட்சா தயாரித்து வருகிறோம். சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகளை நாங்கள் சீரிய முறையில் பின்பற்றி வருகிறோம். இது மீறப்பட்டுள்ளதாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் கவனத்திற்கு வந்துள்ள இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரித்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதி அளிக்கிறோம். நாங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வருகிறோம்” என தனது அறிக்கையில் டோமினோஸ் தெரிவித்துள்ளது.
Leave your comments here...