ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா உளவு கப்பல் : இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகம் வந்துள்ளது. இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன தொழில்நுட்ப ஆய்வு கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியக் கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே இலங்கை இந்தியச் சர்வதேச கடல் எல்லை உள்ளதால் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பருந்து மற்றும் மண்டபத்தில் இந்தியக் கடலோர காவல் படை முகாம்கள் அமைக்கப்பட்டு கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்ட வருகிறது. கடற்படை மற்றும் கடலோர காவல்படையாயினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல் சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையிலிருந்து அகதிகளாகத் தமிழகம் வரும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம், தனுஷ்கோடி அரிசிசல்முனை, அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட கடல் பகுதிகளில் தாழ்வாகப் பறந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தியக் கடற்படையின் இந்த நடவடிக்கை குறித்துப் பாதுகாப்பு வட்டார அதிகாரியிடம் கேட்கும் போது பொதுவாகவே அந்நிய ஊடுருவலைக் கண்காணிப்பதற்காகச் சர்வதேச கடல் எல்லைப் பகுதி, ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் அடிப்படையிலேயே காலை முதல் ஹெலிகாப்டர்கள் கடலில் தொடர்ந்து தாழ்வாகக் கண்காணித்து வருகிறது. மேலும், இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன தொழில்நுட்ப ஆய்வு கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியக் கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியக் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹேவர்கிராப்ட் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சீனா உளவு கப்பல் யுவான் வாங்-5#ChineseWarShip #SpyShip #Hambantota
சீனா கடந்த 1980ம் ஆண்டு யுவான் வாங் என்ற உளவுபார்க்கும் கப்பலை உருவாக்கியது. அது முதல் தலைமுறை கப்பல் என அழைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து 1986ஆம் ஆண்டு இரண்டாவது தலைமுறை உளவு கப்பலை உருவாக்கியது. தற்போது மூன்றாவது தலைமுறை உளவு கப்பலான யுவான் வாங் 5 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்தான் தற்போது இலங்கை துறைமுகத்தில் முகாமிட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கப்பலானது 222 மீட்டர் நீளமும், 25 புள்ளி 2 மீட்டர் அகலமும் உடையது.
இந்த யுவான் வாங் உளவு கப்பல் செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை துறைமுகத்தில் இருந்து 750 கிலோ மீட்டர் வரை உளவு பார்க்கமுடியும். அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா வரை உள்ள நிலபரப்புகளை முழுமையாக உளவு பார்க்க முடியும். இந்த உளவு கப்பல் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் போன்றவற்றை முழுமையாக உளவு பார்க்க முடியும்.
இதனால் நம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.இந்த உளவு கப்பலை கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் தன் வசம் வைத்துள்ளது சீனா. இதேபோன்று 7 உளவு கப்பல்கள் சீனாவிடம் உள்ளன. இதேபோன்று உளவு கப்பல் நம் நாட்டில் உள்ளது.சீனாவானது இந்த யுவான் வாங் உளவு கப்பல் மூலம் எதிரி நாடுகளின் ராணுவ தளவாடங்களை குறித்த தகவல்களை சேகரிக்கவும், அந்த இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவான பாதை எவை போன்ற சர்வேக்களை எடுக்க பயன்படுத்தி வருகிறது
Leave your comments here...