இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன ‘உளவு’ கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி..!

இந்தியாஉலகம்

இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன ‘உளவு’ கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி..!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன ‘உளவு’ கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி..!

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கையின் ஹம்பன்தோட்டா சர்வதேச துறைமுகத்திற்கு வரும் 11ம் தேதி வருவதாக இருந்தது.

ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீன அரசு மிகுந்த பொருட் செலவில் சர்வதேச தரத்திலான துறைமுகமாக மாற்றியது. இந்த பணத்தை திருப்பிச் செலுத்த இயலாததால், ஹம்பன்தோட்டா துறைமுகத்தை இலங்கை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டது.

இந்நிலையில், செயற்கைக்கோள்களை ஆய்வு செய்யும் யுவான் வாங் 5 என்ற கப்பலை அந்த துறைமுகத்திற்கு அனுப்ப சீனா திட்டமிட்டது. எனினும் இந்த கப்பல் உளவுத் தகவல்களை சேகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டது என கருதப்படுவதால் அக்கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வர இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து யுவான் வாங் 5 கப்பலின் வருகையை காலவரையின்றி நிறுத்திவைக்குமாறு இலங்கை சீனாவுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, இலங்கை சுதந்திர நாடு என்றும் அந்த நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் சீனா இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து இலங்கை சீன கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்குள் வர அனுமதி வழங்கி உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், திட்டமிட்ட நாளில் இருந்து 5 நாட்கள் கடந்து ஆகஸ்ட் 16ம் தேதி யுவான் வாங் 5 கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இருந்தவாறு யுவான் வாங் 5 கப்பல் செயற்கைக்கோள் ஆய்வுகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்திய பெருங்கடலின் வட பகுதிகளில் இந்த ஆய்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு நிலைகள் குறித்த தகவல்களை சீனா சேகரிக்கக்கூடும் என்பதால் இதனை பாதுகாப்பு அச்சுறுத்தலாக மத்திய அரசு பார்க்கிறது.

Leave your comments here...