மீன்தொட்டிக்குள் யோகாசனம் செய்த 9 வயது மாணவி: நோபல் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை..!

விளையாட்டு

மீன்தொட்டிக்குள் யோகாசனம் செய்த 9 வயது மாணவி: நோபல் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை..!

மீன்தொட்டிக்குள் யோகாசனம் செய்த 9 வயது மாணவி: நோபல் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை..!

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை யைச் சேர்ந்த கோவிந்தராஜ்- பார்வதி தம்பதியின் மகள் முஜிதா செவல்பட்டியில் உள்ள தாமு மெமோரியல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 3- ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யோகாசனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். முஜிதா தேசிய மற்றும் மாநில அளவில் பல சாதனைகள் படைத்துள்ளார்.

அதன் ஒரு முயற்சியாக பள்ளி வளாகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் மாணவி முஜிதா இன்று ஒரு அடி அகலமும் 21 இன்ச் நீளமும் கொண்ட சிறிய மீன் தொட்டிக்குள் அமர்ந்து கண்டபெருண்ட ஆசனம் என்ற ஆசனத்தில் தனது இரு கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து முகத்திற்கு முன் பகுதி கொண்டுவந்து அமர்ந்து 8 நிமிடங்கள் இரண்டு நொடிகள் தொடர்ந்து இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு ஒருவர் 2012ம் வெளிநாட்டில் 3 நிமிடம் செய்தது  சாதனையாகவே இருந்தது. அந்த சாதனையை இன்று முஜிதா முறியடித்தார். யோகாவில் சாதனை படைத்த முஜிதா நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்ல் இடம் பெற்றார்.சாதனை படைத்த மாணவி முஜிதாவிற்கு சான்றிதழ்களும் பதக்கமும் அரவிந்த் இந்தியன் இயக்குனர், வினோத் தமிழ்நாடு நடுவர், ஜெயபிரதாப் தமிழ்நாடு நடுவர், வழங்கினர்

Leave your comments here...