திருப்பதி ஏழுமலையானுக்கு 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நன்கொடையாக வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்.!
திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு, 25 ஸ்கூட்டர்களை டி.வி.எஸ்., நிறுவனம் நன்கொடையாக வழங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ்., நிறுவனம், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நன்கொடையாக வழங்கியது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்து அதனை கண்டிப்புடன் செயல்படுத்தி வருகிறது. பக்தர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என அலிபிரி சோதனை சாவடியில் தீவிர சோதனை நடத்திய பின்னரே பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பிரசாதம் வழங்க பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் சணல் பைகள் பயன்பாட்டில் உள்ளன.
மேலும் காற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க 100 பேட்டரி கார்களை தேவஸ்தானம் பயன்படுத்தி வருகிறது. விரைவில் திருமலையில் 100 எலக்ட்ரிக் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், டிவிஎஸ் நிறுவனம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நேற்று ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 25 எலக்ட்ரிக் பைக்குகளை காணிக்கையாக வழங்கியது.
இதற்கான வாகன பூஜை நேற்று கோயிலுக்கு முன் நடைபெற்றது. வாகன சாவிகளை, டிவிஎஸ் நிறுவன துணைத் தலைவர் செல்வம் மற்றும் மனோஜ் சக்சேனா ஆகியோர், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டியிடம் வழங்கினர். இந்த பைக்குகள் திருமலையில் மட்டும் தேவஸ்தான ஊழியர்களால் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
Leave your comments here...