நாட்டின் 15-வது ஜனாதிபதியாக உள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.!
இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 18ல் நடந்து முடிந்தது.
இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு தேவையான வாக்குகளை திரவுபதி முர்மு கடந்துள்ளார். இதன் மூலம், நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்க உள்ளார்.
#WATCH | Prime Minister Narendra Modi leaves from the residence of NDA's Presidential candidate #DroupadiMurmu after congratulating her on being elected as the country's President. pic.twitter.com/aM6aIckOxB
— ANI (@ANI) July 21, 2022
இந்த நிலையில், திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் தனது திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Leave your comments here...