திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இன்று (ஜூலை 20) அதிகாலை முதல், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் இரண்டு இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, இலங்கையை சேர்ந்த 67 பேர் உட்பட கனடா, இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளி நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், பலருக்கு தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படவில்லை என்று கூறி, அவர்கள், பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் 15க்கும் மேற்பட்டோர், தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
NIA team led by SP Dharmaraj is investigating from 5am today on a crime case of Delhi. Other details to come after the probe, which might go for another 2hrs; police & central forces present, DGP has been informed: Pradeep Kumar, Tiruchirappalli, District Collector pic.twitter.com/XfiznHJRGh
— ANI (@ANI) July 20, 2022
இதனை தொடர்ந்து, திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அதன் பின், கடந்த 2ம் தேதி, 16 பேர் சிறப்பு முகாம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் முகாம் சிறையில், இன்று (ஜூலை 20) அதிகாலை, 4 மணி முதல் சென்னை, கொச்சின் போன்ற இடங்களில் இருந்து வந்த ஐ.ஜி., டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., தலைமையிலான என்.ஐ.ஏ., ( தேசிய பாதுகாப்பு முகமை) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் இரண்டு இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை மண்ணடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றிலும் சோதனை நடந்தன.
Leave your comments here...