200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை – பிரதமர் மோடி வாழ்த்து.!

இந்தியா

200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை – பிரதமர் மோடி வாழ்த்து.!

200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை – பிரதமர் மோடி வாழ்த்து.!

அறிவியல் மீது அபாரமான நம்பிக்கை கொண்டிருந்து, 200 கோடி கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் என்ற சிறப்பு எண்ணிக்கை கடந்ததற்கு பிரதமர் மோடி நாட்டு மக்களைப் பாராட்டியுள்ளார்.

இந்தத் திட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோரின் உணர்வையும், அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் அறிவிப்புக்கு ட்விட்டர் பதிவில் பதிலளித்த பிரதமர் கூறியதாவது: “இந்தியா மீண்டும் வரலாறு படைத்துள்ளது! 200 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற சிறப்பு எண்ணிக்கை கடந்ததற்கு இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தை அளவிலும், வேகத்திலும் இணையற்றதாக மாற்ற பங்களித்தவர்களால் பெருமிதம் கொள்கிறேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிரான சர்வதேச போராட்டத்தை இது வலுப்படுத்தியுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் திட்டம் முழுவதும், அறிவியலின் மீது இந்திய மக்கள் அபாரமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். பாதுகாப்பான பூமியை உறுதி செய்வதற்கு நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்ள பணியாளர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் முக்கிய பங்காற்றினார்கள். அவர்களது உணர்வையும், அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன்.”

Leave your comments here...