உ.பியில் 400 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத்தலத்தில் 108 அடி உயர அனுமன் சிலை..!

இந்தியா

உ.பியில் 400 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத்தலத்தில் 108 அடி உயர அனுமன் சிலை..!

உ.பியில்  400 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத்தலத்தில் 108 அடி உயர அனுமன் சிலை..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள தேவ்காட் பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான அனுமன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற கோவிலுக்கு மக்கள் அதிகளவில் வழிபாட்டிற்காக வரும் நிலையில், இங்கு பெரிய அனுமன் சிலையை வைப்பதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி அனுமன் கோவிலுக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில், குஜராத்தைப்போன்று 108 அடி உயரத்தில் அனுமன் சிலை வடிவமைக்கப்படவுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜூலேலால் பூங்காவில் உள்ள 151 அடி உயர லட்சுமணன் சிலைக்கு பிறகு இந்நகரின் அமையவுள்ள உயரமான சிலை இதுவாகும். 400 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலுக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள சிலை பிரபல சின்ஹா சகோதரர்களால் வடிவமைக்கப்படவுள்ளது. மேலும் லக்னோவில் உள்ள அனுமன் சிலை, சின்னமான ரூமி கேட்டை விட இரண்டு மடங்கு உயரத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்று பல்வேறு சிறப்புகளுடன் அமையவுள்ள லக்னோ சிலை மற்றும் பணிகள் குறித்து கோமதி பாபா என்று அழைக்கப்படும் ஹனுமத் தாமின் தலைவரான மஹந்த் ராம் சேவக் தாஸ் கூறுகையில், ஹரித்வாரில் கங்கைக்கரையில் உள்ள சிவன் சிலையைப்போல, ஹனுமன் சிலை அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் என தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 108 அடி உயர அனுமன் சிலை தயாராகிவிடும் எனவும் இந்த திட்டத்தில் தியான மண்டபம், பண்டார மண்டபம், பஜனை மண்டபம் மற்றும் ஆம்பிதியேட்டர் போன்றவையும் உள்ளதாகவும் லக்னோவில் உள்ள ஹனுமத் தாமின் தலைவர் மஹந்த் கூறியுள்ளார்.

இத்தகைய பல்வேறு அம்சங்களுடன் வரவுள்ள அனுமன் சிலையை பார்ப்பதற்கு ஆன்மீக மக்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக லக்னோவில் ஹனுமத் தாமில் உள்ள ஹனுமான் மற்றும் சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கோவில்கள் மிகவும் பழமையானது. முன்னதாக இந்தியாவில் குஜராத் மாநிலத்தில், இந்தாண்டு ஏப்ரல் மாதம் தான் 108 அடி உயரத்தில் நிறுவப்பட்ட அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்டமாக திறந்து வைத்தார்.

அப்போது இதுக்குறித்து ட்விட்டர் பதிவிட்ட பிரதமர் மோடி, நாடு முழுவதும் நான்கு திசைகளில் அமைக்கப்படவிருக்கும் 4 சிலைகளில் இது இரண்டாவது சிலை என தெரிவித்திருந்தார். மேலும் மேற்கு பக்கத்தில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளதாகவும் இந்த செயல்பாட்டின் முதலாவது சிலை வடக்கே 2010 ஆம் ஆண்டு சிம்லாவில் அமைக்கப்பட்டது என பதிவிட்ட அவர், தெற்கே ராமேஸ்வரத்திலும் சிலை நிறுவும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...