வாட்ஸ் அப் செயலியில் அடுத்த புதிய அப்டேட்… கான்டக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி..!
- July 10, 2022
- jananesan
- : 685
- NewUpdates, Whatsup
இன்று உலக அளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகிறது சமூக வலைதள செயலியான வாட்ஸ்-அப். மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். சமயங்களில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் இதில் அனுப்பிக் கொள்வதுண்டு. இருந்தாலும் அந்த ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும்.
அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பவுதுண்டு. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும் அளவிற்கு வாட்ஸ அப் செயலி மேம்படுத்தப்படுகிறது.
மேலும் வாட்ஸ் அப் செயலியில் இடம்பெற்ற உள்ள கூடுதல் அப்டேட்டுகளை பார்க்கலாம்!!
-அறிமுகம் இல்லாதவரின் மொபைல் எண்ணை சேவ் செய்யாமலேயே அந்த நபருக்கு டைரக்ட் மெசேஜ் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகிறது.
-ரியாக்சனை வெளிப்படுத்த, பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போன்று எமோஜி அறிமுகமாகிறது.
-வாட்ஸ் அப் குரூப்பில் எந்த நபரும் பதிவிடும் தகவலை, அதன் அட்மின் நீக்குவதற்கான வசதி அறிமுகமாகிறது.
-வாட்ஸ் அப் குரூப் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும் வர உள்ளது.
-பல வாட்ஸ் அப் குரூப்களை கையாளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
Leave your comments here...