லடாக் எல்லையில் பறந்த சீனா போர் விமானம் – தயார் நிலையில் இந்தியா விமானப் படை..!

இந்தியாஉலகம்

லடாக் எல்லையில் பறந்த சீனா போர் விமானம் – தயார் நிலையில் இந்தியா விமானப் படை..!

லடாக் எல்லையில் பறந்த சீனா போர் விமானம் –  தயார் நிலையில் இந்தியா விமானப் படை..!

கடந்த வாரம், கிழக்கு லடாக்கில் நம் எல்லைப் பகுதிக்கு மிக அருகே, சீன ராணுவத்தின் போர் விமானம் பறந்து சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது

இந்தியா சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இரு தரப்பு ராணுவமும், அதிகாரிகளும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பல சுற்று பேச்சுக்கு பின், எல்லையில் படைகள் படிப்படியாக திரும்ப பெறப்பட்டன. ஆனாலும், பிரச்னைக்குரிய சில பகுதிகளில் படைகள் இன்னும் திரும்ப பெறப்படவில்லை.இந்நிலையில், கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள், அதிகாலை 4:00 மணிக்கு, சீன ராணுவத்தின் போர் விமானம், நம் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் பறந்து வந்து திரும்பி உள்ளது.

இதை நம் ராணுவத்தினர் நேரடியாக கண்டுள்ளனர். மேலும், ‘ரேடார்’ வாயிலாகவும் இது பதிவாகி உள்ளது. இதையடுத்து, நம் போர் விமானங்கள், ஆயுதங்கள் உடனடியாக தயார் நிலைக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய பகுதியில், சீன ராணுவம் போர் விமான பயிற்சியில் ஈடுபட்ட போது, இந்திய பகுதிக்கு மிக அருகே அவர்கள் விமானம் வந்து சென்றது தெரியவந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்களால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், இது தேவையற்ற பதற்றத்தையும், சண்டையையும் துாண்டிவிட வாய்ப்புள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...