அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது இந்திய ராணுவம் .!
அக்னிபத் திட்டத்திற்கு ஆட்களை சேர்க்கும் முறைக்கு மத்திய அரசு சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் முதல் விண்ணப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
முப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர். இந்த திட்டத்தில் சேரும் வயது வரம்பு 17 முதல் 23 வரையாகும்.
அக்னிபத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அக்னி வீரர்களின் பணிக்காலம் 4 ஆண்டுகளாகும். 4 ஆண்டுகளுக்கு பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதிவும் வழங்கப்படாது. அதேவேளை, வீரர்களின் பணிக்காலத்தின்போது அவர்களுக்கான ஊதியமாகாக மொத்தம் 5 லட்ச ரூபாய் கிடைக்கும். ஓய்வுக்கு பின் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறி ரெயில்களுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. அதேவேளை, அக்னிபத் திட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை இந்திய ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர அடுத்த மாதம் முதல் விண்ணப்பதிவு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் joinindianarmy.nic.in என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம் என்று இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Leave your comments here...