அமெரிக்காவில் 6 மாத குழந்தைகளுக்கு மாடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி..!

உலகம்

அமெரிக்காவில் 6 மாத குழந்தைகளுக்கு மாடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி..!

அமெரிக்காவில் 6 மாத குழந்தைகளுக்கு மாடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி..!

அமெரிக்காவில் அதிகரித்து காணப்படும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், 6 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசி போட அந்நாட்டில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அந்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட ஏறக்குறைய 1.8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் ஆவர். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி தந்துள்ளது. இதேபோன்று, பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் வயதினருக்கு மாடர்னா தடுப்பூசியை செலுத்தவும் உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்து உள்ளது. இதற்கு முன்பு வரை இந்த வயதினருக்கு பைசர் தடுப்பூசிக்கு மட்டுமே அனுமதி இருந்தது.

இந்த தடுப்பூசியை செலுத்தும் பணிகள் வருகிற திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமை முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம் ஒரு சில மாதங்கள் தடுப்பூசியை செலுத்தும் பணியை தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளுக்கு, மாகாணங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மருந்து கடைகள் உள்ளிட்டவை முன்பே ஆர்டர் கொடுத்து விட்டன.

Leave your comments here...