கப்பல்களை மறுசுழற்சி செய்வதில் உலகின் சிறந்த நடைமுறைகளையும் பின்பற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது: மன்சுக் மண்டாவியா.!
ஹாங்காங் சர்வதேச ஒப்பந்தம் 2009-ல் சேருவதற்கு இந்தியா எடுத்துள்ள முடிவை சர்வதேச கடல் வாணிப அமைப்பு பெரிதும் பாராட்டியுள்ளது. இதனை வரவேற்றுள்ள மத்திய கப்பல் போக்குவரத்து (தனிப்பொறுப்பு) மற்றும் ரசாயனம், உரங்கள் துறை இணையமைச்சர் திரு. மன்சுக் மண்டாவியா, சர்வதேச கடல்சார் வாணிப அமைப்பின் பாராட்டு, உலக கப்பல் மறுசுழற்சி தரங்களை கடைப்பிடிக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதற்கு சான்று பகிர்வதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த வகையில் உலகின் மிகச் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க நாம் உறுதியுடன் உள்ளோம் என்றும் கப்பல் மறுசுழற்சித் தொழிலில் முன்மாதிரியாக இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். ஹாங்காங் சர்வதேச ஒப்பந்தம், கப்பல்கள் அவற்றின் ஆயுள்காலத்திற்கு பிறகு மறுசுழற்சி செய்யப்படும் போது, மனிதர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்காது என்பதை உறுதி செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும்.
Leave your comments here...