இந்தியா – நேபாள நட்புறவு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் – பிரதமர் மோடி

இந்தியாஉலகம்

இந்தியா – நேபாள நட்புறவு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் – பிரதமர் மோடி

இந்தியா – நேபாள நட்புறவு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் – பிரதமர் மோடி

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேபாளம் சென்றார். அங்குள்ள மாயாதேவி கோயிலுக்கு சென்று வழிப்பட்ட அவர், புத்தரின் பிறந்த இடமாக கருதப்படும் லும்பினியில் உள்ள புத்த கலாசார மையத்திற்கு சென்று சிறப்பு பூஜை நடத்தினார்.

பின்னர், நேபாளத்துடன் 6 முக்கிய ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். தொடர்ந்து புத்த துறவிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, நேபாளத்தின் நட்பு வலுப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சூழ்நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்கும்.

புத்த பகவான் மீது நமது இரு நாடுகளின் பக்தியும், நம்பிக்கையும் நம்மை ஒரே இழையில் இணைக்கிறது. அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களாக ஆக்குகிறது. தியாகம் செய்வதன் மூலமே நாம் சிறப்பை அடைய முடியும் என்பதற்கு புத்தர் உதாரணம். புத்தர் தனக்கு கிடைத்த ஞானத்தின் மூலம் மக்களை நல்வழிப்படுத்தினார். நான் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டாம், ஆராய்ந்து உணருங்கள் என புத்தர் கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.

நேபாளத்தில் உள்ள லும்பினிக்குப் பிரதமர் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட / பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்கள் பட்டியல்

1. புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்தசமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

2. இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து சிஎன்ஏஎஸ் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

3. இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காத்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

4. சென்னை இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், இந்தியா, காத்மாண்டு பல்கலைக்கழகம்,நேபாளம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

5. இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம், சென்னை, இந்தியா, காத்மாண்டு பல்கலைக்கழகம், நேபாளம் இடையே ஒப்பந்தத்திற்கான விருப்ப கடிதம் ( முதுநிலை அளவில் கூட்டு பட்டப்படிப்பு திட்டத்திற்காக)

6. அருண் 4 ப்ராஜெக்ட் என்பதன் அமலாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே ஒப்பந்தம்

Leave your comments here...