இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்..!

இந்தியா

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்..!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்..!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வருகிற 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் வருகிற 15ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அதில், ராஜீவ் குமாரை அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார் என்று தெரிவித்து அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.


1960ம் ஆண்டில் பிறந்த ராஜீவ் குமார், 1984ஆம் ஆண்டு ஜார்க்காண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, கடந்த 36 வருடங்களில் ராஜீவ் குமார் பல்வேறு முக்கியமான துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் மத்திய மனிதவள பிரிவிலும் ராஜீவ் குமார் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave your comments here...