தமிழகத்தில் 2021-ல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.!

தமிழகம்

தமிழகத்தில் 2021-ல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.!

தமிழகத்தில் 2021-ல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.!

2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2019ம் ஆண்டு 370 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 404 வழக்குகளும், 2021ம் ஆண்டு 442 வழக்குகளும் பதிவாகியுள்ளன. வரதட்சணை மரணம் தொடர்பாக 2019-ல் 28 வழக்குகளும், 2020ம் ஆண்டு 40 வழக்குகளும், 2021ம் ஆண்டு 27 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019ம் ஆண்டு ஆயிரத்து 982 வழக்குகளும், 2022ம் ஆண்டு இரண்டாயித்து 25 வழக்குகளும், 2021ம் ஆண்டு இரண்டாயிரத்து 421 வழக்குகள் பதிவாகிஉள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் 2019-ல் ஆயிரத்து 742 ஆக பதிவாகியுள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாயிரத்து 229 வழக்குகளும், 2021ம் ஆண்டு மூவாயிரத்து 425 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தத்தில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக 2019 ம் ஆண்டு இரண்டாயித்து 396 வழக்குகளும், 2020ம் ஆண்டு மூவாயிரத்து 90 வழக்குகளும், 2021 ம் ஆண்டு நான்காயிரத்து 469 வழக்குகள் பதிவாகி உள்ளதாக காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...