தடுப்பூசி உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு..!

இந்தியா

தடுப்பூசி உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு..!

தடுப்பூசி உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு..!

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடிக்கணக்கில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் கடந்த ஆண்டு இறுதியில் உற்பத்தியை நிறுத்திவிட்டோம் என கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் எங்களிடம் தற்போது கையிருப்பில் உள்ளது.

தடுப்பூசி தயாரிக்கும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியே நிறுத்திவிட்டோம். விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள் எங்களிடம் உள்ளது. இந்த தடுப்பூசிகளை யாராவது இலவசமாக எடுத்துக்கொள்ளவும் நான் முன்வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...