பேருந்து நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு – காவல்துறையினர் விசாரணை..!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.
இது குறித்து பேருந்து நிலைய அதிகாரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தின் கீழ் தளத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுவரில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதை அறிந்த அவர்கள் தடயங்களை சேகரித்ததுடன், அருகே கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இரவு நேரம் என்பதால் பயணிகள் யாரும் அங்கு இல்லை, மேலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிகிறது. புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் வெடிகுண்டு வெடித்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து நிலையத்திலும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இருந்தும் நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் யார் ? எங்கு தயாரித்தார் ? இதனை வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா ஞாயிறு பகலில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கும் வெடிகுண்டு வீச்சு இருக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Leave your comments here...