ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப் கார் சேவை சோதனை ஓட்டம்..!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த சிவஸ்தலம் ஆனது 1017 படிக்கட்டுகளை கொண்டுள்ளது.
இத்திருக்கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இத் திட்டமானது கடந்த 2017-ஆம் ஆண்டு மீண்டும் ரோப் கார் பணிகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற துவங்கியது.
இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக தொய்வான பணிகள் மீண்டும் துவங்கி மந்தமாக நடைபெற்று முழுமை பெறாத நிலையில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு என்று அவசர அவசரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜூன் மாதம் அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் ஆய்வு மேற்கொண்டு ரோப் கார் பணிகளை 9 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் பேசிய இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அய்யர்மலை திருக்கோவிலில் சில நாட்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று பின்னர் மக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டு மொத்தமாக 6.17 கோடி மதிப்பில் தற்போது பணிகள் நிறைவடைந்ததை அடுத்து சனிக்கிழமை ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த ரோப் கார் சோதனை ஓட்டத்தை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் துவக்கிவைத்தார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். பின்னர், குளித்தலை அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியின் பெயர் மீண்டும் டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என பெயர்மாற்றம் வெளியிடப்பட்டு அரசு ஆணை வெளியானதை அடுத்து கல்லூரியில் பெயர் மாற்றப்பட்டதை பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
Leave your comments here...