இந்து கடவுள்கள் மீது அவதூறு : பள்ளியில் மாணவிகளிடம் மதமாற்றம் – தையல் ஆசிரியை சஸ்பெண்ட்..!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அமைந்துள்ளது கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் தையல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம் என்பவர் ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் மதமாற்றம் செய்யும் விதமாக தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் புகாரளித்தனர். தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர்.
மேலும் தையல் தைக்கும் போது ஒரு மதத்தை சார்ந்த சின்னத்தை முதலில் தைத்த பிறகே வேலை தொடங்க வேண்டும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசல்புரசலாக தகவல் வழியாகவே இரணியல் காவல் நிலைய போலீசார் நேற்று கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஒரு மாணவி போலீசாரிடம் கூறும்போது, “தையல் வகுப்பு எடுக்கும் ஆசிரியை பைபிள்தான் நல்ல புத்தகம், பகவத்கீதை கெட்டது என சொல்லுகிறார். மேலும் கதை எல்லாம் சொல்லித்தந்தாங்க.ஒரு கிறிஸ்டீனும், சாத்தானும் பைக்கில போய்கிட்டு இருந்தாங்களாம். இந்துவ சாத்தான்னு சொல்லுறாங்க. அப்போது திடீரென ஆக்ஸிடண்ட் நடந்துச்சாம். அப்ப ஒருத்தர் பைபிள் படிச்சுகிட்டு இருந்ததுனால இறந்தவங்க உயிர் பிழைச்சுட்டாங்களாம். துணி தச்சு தந்தாலும் பிளஸ் சிம்பல்தான் தச்சுதருவாங்க. மதியம் சாப்பிட்டதுக்கு அப்புறம் கையை கோர்த்து, முட்டிபோட்டு பிரேயர் பண்ணணும்னு சொன்னாங்க. அப்புறம் சாப்பிடதுக்கு பிறகு பிரேயர் பண்ண கூப்பிட்டாங்க. கிறிஸ்தவ பிள்ளைங்க மட்டும் போனாங்க, நாங்க போகல” என அந்த மாணவி கூறினார்.
இதனைத் தொடர்ந்து,சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தையல் ஆசிரியையை பியட்றிஸ் தங்கத்தை இன்று பணி இடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் புகழேந்தி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave your comments here...