வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்வு..!
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்; சமூகநீதி பாதையில் செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும், ஆங்காங்கே சில பிரச்சனைகள் நடக்கின்றன. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் ரூ.40 கோடி செலவில் மாணவர் விடுதி கட்டப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Leave your comments here...