தூய்மை இந்தியா இயக்கம் – பொது கழிப்பறைகள் கட்டுவதற்காக தமிழகத்திற்கு ரூ 93.52 கோடி.!
தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் சமுதாய/பொது கழிப்பறைகள் கட்டுவதற்காக தமிழகத்திற்கு ரூ 93.52 கோடி தரப்பட்டது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியுள்ளார்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள் மற்றும் சமூக/பொதுக் கழிப்பறைகளைக் கட்டுவதன் மூலம் 100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை அடைவதற்கான முதன்மை நோக்கங்களுடன் தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் தொடங்கப்பட்டது.
30.9.2021 வரை நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்துவதற்காக 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1 அக்டோபர், 2021 அன்று தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 மூலம் இது நீட்டிக்கப்பட்டது.
தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் திட்டத்தின் தனிநபர் வீட்டு கழிப்பறைகளின் இலக்கு 58.99 லட்சம் ஆகும், ஆனால் 62.63 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டன.நகர்ப்புறம் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் சமுதாய/பொது கழிப்பறைகளின் இலக்கு 5.07 லட்சம் ஆகும், ஆனால் 6.21 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டன.
தமிழ்நாட்டில் தனிநபர் வீட்டு கழிப்பறைகளை கட்டுவதற்காக ரூ 184.02 கோடியும், சமுதாய/பொது கழிப்பறைகள் கட்டுவதற்காக ரூ 93.52 கோடியும் திட்டக் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தனிநபர் வீட்டு கழிப்பறைகளை கட்டுவதற்காக ரூ 209.84 கோடியும், சமுதாய/பொது கழிப்பறைகள் கட்டுவதற்காக ரூ 71.38 கோடியும் தமிழ்நாட்டிற்கு தரப்பட்டது.
Leave your comments here...