ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டரை வாங்கிய கேரள தொழிலதிபர்!
இந்தியாவில் முதன் முதலாவதாக ரூ.100 கோடி மதிப்பிலான H 145 ரக சொகுசு ஹெலிகாப்டரை ஆர்பி குரூப் நிறுவனங்களின் சேர்மேன் ரவி பிள்ளை, வாங்கியுள்ளார். உலகளவில் 1,500 H 145 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ரூ.250 கோடி சொத்து மதிப்பை கொண்ட தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பல்வேறு நிறுவனங்களும் சொந்தமாக உள்ளன. அவரது, நிறுவனங்களில் சுமார் 70,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கோழிக்கோட்டில் உள்ள ராவிஸ் கடவு, கொல்லத்தில் உள்ள ராவிஸ் அஷ்டமுடி மற்றும் திருவனந்தபுரத்தில் தி ராவிஸ் கோவளம் ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல்களில் ஆர்பி குழுமம் ஹெலிபேடுகளைக் கொண்டுள்ளது. ரவி பிள்ளை, தனது தொண்டு நடவடிக்கைகளுக்காகவும், அரசியல் கட்சிகளை கடந்து உயர் அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளவராகவும் அறியப்படுகிறார்.
சொகுசு ஹெலிகாப்டரின் சிறப்ப என்ன?
அனைத்து நவீன பாதுகாப்பு அம்சங்களையும் கொண்ட இந்த அதிநவீன ஹெலிகாப்டரில் 7 பயணிகளையும், பைலட்டையும் ஏற்றிச் செல்ல முடியும். இந்த ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் இருந்தும் தரையிறங்கும் மற்றும் புறப்படும் திறன் கொண்டது. இந்த ஹெலிகாப்டரில் கூடுதலாக, ஆற்றல் திறன் மிகுந்த இருக்கைகளைக் கொண்டள்ளது. இதன் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் பயணிகளின் பாதுகாப்பை அது உறுதி செய்கிறது.
இதில் அதி நவீன வயர்லெஸ் தகவல் தொடர்பு சிஸ்டங்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் தொழிலதிபர் ரவி பிள்ளையின் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஏனெனில், அவருக்கு மாநிலம் முழுவதும் சொகுசு ஹோட்டல்கள் உள்ளதால், மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தனது விருந்தினர்களை அழைத்துச் செல்ல இது பயன்படுத்தப்படும் என்று ஆர்பி குழுமத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Leave your comments here...