இன்ப்ரா மார்கெட் நிறுவனத்தில் ரூ.224 கோடி கணக்கில் வராத வருமானம் – 23 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு..!

இந்தியா

இன்ப்ரா மார்கெட் நிறுவனத்தில் ரூ.224 கோடி கணக்கில் வராத வருமானம் – 23 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு..!

இன்ப்ரா மார்கெட் நிறுவனத்தில் ரூ.224 கோடி கணக்கில் வராத வருமானம் – 23 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு..!

இந்தியா முழுவதும் இன்ப்ரா மார்கெட் எனும் நிறுவனம் கட்டுமான நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய தொழில்நுட்ப ரீதியாக உதவும் நிறுவனம். ஆண்டுக்கு ரூ.6,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் இந்நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் மண்டல அலுவலகங்கள் உள்ளன.

இந்நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் 9 அன்று நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் அமைந்துள்ள நொய்டா, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 23 இடங்களில் சோதனை நடத்தியது.

அது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்டுமானப் பொருட்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள குழுமம், கணக்கில் வராத ரூ.1 கோடி மற்றும் ரூ.22 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்குழுமம் கொள்முதல் செய்ததாக போலியாக பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டாமல் பெரிய தொகையை செலவிட்டுள்ளனர். ரூ.400 கோடிக்கு மேலான தொகையை முறைகேடாக கணக்கு காட்டி வரி செலுத்தாமல் இருந்துள்ளனர்.

மேலும் இக்குழுமம் பங்குகளை மிக அதிக பிரீமியங்களுக்கு வெளியிட்டு மொரிஷியஸ் வழியாக பெரும் வெளிநாட்டு நிதியை பெற்றது கண்டறியப்பட்டது. மும்பை மற்றும் தானேவை சேர்ந்த ஷெல் நிறுவனங்களின் ஹவாலா நெட்வொர்க்கும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் குழும இயக்குனர்கள் முன் வைக்கப்பட்டன. அவர்கள் அதனை ஒப்புக்கொண்டு பல்வேறு ஆண்டுகளில் ரூ.224 கோடிக்கும் அதிகமான கூடுதல் வருமானத்தை தெரியப்படுத்தினர். அதற்கான வரியை செலுத்தவும் முன் வந்தனர். என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...