2,800-க்கு மேற்பட்ட உக்ரைன் ராணுவ தளவாடங்கள் அழிப்பு- ரஷியா ராணுவ அமைச்சகம் வெளியிட்ட தகவல்..!
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,800-க்கு மேற்பட்ட உக்ரைன் ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷியா ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு சொந்தமான 84 ரேடார் நிலையங்கள், 974 பீரங்கிகள், 104 ராக்கெட் ஏவுதள அமைப்புகள், 827 ராணுவ வாகனங்கள், 97 டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை அழிக்கப்பட்டுள்ளதாக ரஷியா ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave your comments here...