காஷ்மீர் இளைஞர்களை கையெறி குண்டு வீச பயன்படுத்தும் பயங்கரவாத அமைப்புகள் – வெளியான அதிர்ச்சி தகவல்..!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பொது இடங்களில் தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களையும் இந்த பயங்கரவாத அமைப்புகள் தங்களது தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொள்வது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஹேண்ட் கிரானைட் என்கிற கையெறி குண்டுகள் வீச்சுக்கு இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.
சமீபத்தில் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 34 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பயங்கரவாத அமைப்புகள் முக்கிய நகரங்களில் தங்களது தொடர்பை விரிவாக்கம் செய்ய முடியாத காரணத்தால் இளைஞர்களை குண்டு வீச பயன்படுத்துவது தெரியவந்தது. பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பயங்கரவாதிகள் தாக்கி வருவது தெரியவந்துள்ளது.
இது குறித்து லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே கூறுகையில்- தலைநகர் ஸ்ரீநகரில் மிகவும் பரபரப்பான ஹரி சிங் தெருவில் நடந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மரணமடைந்தவர்களது உடல்பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவதாக உன் தெரிவித்துள்ளார்.
விரைவில் கையெறி குண்டு தாக்குதலில் தொடர்புடைய இளைஞர்கள் கைது செய்யப்படுவார் என்றும் அவர்களை வழிநடத்தும் பயங்கரவாத அமைப்புகள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Leave your comments here...