சுப்ரீம் கோர்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பொன்மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது- சென்னை ஐகோர்ட்
சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராகவும், தனது பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது:- பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் பொன் மாணிக்கவேலின் பதிலுக்காகவே வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி அரசு உயர் நீதிமன்றத்தை மிரட்டுகிறது என்று வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து கடந்த 2018 நவம்பர் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவை பிறபிக்கும் வரை சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலே நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்க முடியாது என கூறிய பதவி நீட்டிப்பு கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 6 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Leave your comments here...