தேர்தல் பிரசாரம் : சாலையோர டீக்கடைக்கு சென்று டீ குடித்த பிரதமர் மோடி..!
உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. 7-ம் மற்றும் இறுதிகட்ட தேர்தல் மார்ச் 7-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பாஜக மூத்த தலைவரும், இந்திய பிரதமருமான நரேந்திரமோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சாலையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் காரில் சென்ற பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அதன் பின்னர் திடீரென காரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி பிரசாரம் நடைபெற்ற பகுதிக்கு அருகே அமைந்திருந்த டீக்கடைக்கு சென்றார். அங்கு பாஜக வேட்பாளருடன் இணைந்து பிரதமர் மோடி டீ குடித்து மகிழ்ந்தார்.
Leave your comments here...