ஆவின் நிறுவனத்தின் தயிர், நெய் இன்று முதல் விலை உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பாலை கொள்முதல் செய்வது, பதப்படுத்தும் செயல்முறை, குளிரூட்டுதல், விற்பனை ஆகிய அனைத்து செயல்களையும் ஒருங்கிணைந்து செய்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று முதல் நெய், தயிர், பாதாம் பவுடர், போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கபட்டுள்ளன. ஆவினின் தயிர், நெய், பாதாம் பவுடர் உள்ளிட்டவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது.
இதன்படி ஒரு லிட்டர் நெய் ரூ.515ல் இருந்து ரூ. 535 ஆகவும் அரை லிட்டர் நெய் ரூ.265 ல் இருந்து ரூ.275 ஆகவும்
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்ந்தது
200 மி.லி., நெய் ரூ.115ல் இருந்து ரூ.120 ஆகவும்
5 லிட்டர் நெய் ரூ.2,550ல் இருந்து ரூ.2,650 ஆகவும்
15 கிலோ நெய் ரூ.8,350 ல் இருந்து ரூ.8,680 ஆகவும்
500 எம்எல் தயிர் ரூ.27 ல் இருந்து ரூ.30 ஆகவும்
200 கிராம் சாதா தயிர் ரூ.14 ல் இருந்து ரூ.15 ஆகவும்
200 கிராம் ஸ்பெஷல் தயிர் ரூ.22ல் இருந்து ரூ.25 ஆகவும்
200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும்
100 எம்எல் கிளாசிக் கோன் – வென்னிலா – ரூ.28 ல் இருந்து ரூ.30 ஆகவும்
100 எம்எல் கிளாசிக் கோன்- சாக்லேட் ரூ.28 ல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Leave your comments here...