இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 84 ஆயிரத்து 854 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. 6 கோடியே 87 லட்சத்து 79 ஆயிரத்து 182 பயனாளிகள் உள்ளனர். 39 மாவட்டங்களில் மொத்தம் 244 கிடங்குகள் உள்ளன. 34 ஆயிரத்து 773 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் ஏராளமானோர் புதிய அட்டைகளுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு ஆவணங்களை சரிபார்த்து தாமதமில்லாமல் அட்டைகளை விநியோகிக்க உத்தரவிடப்பட்டது.அட்டைகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது போல் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும், இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதியாகும்பட்சத்தில், நியாய விலைக்கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Leave your comments here...