சென்னை விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் – 2 பயணிகள் கைது..!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்புள்ள 2.766 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பிப்ரவரி 9-ம் தேதியன்று வந்த சென்னையைச் சேர்ந்த ஜமீம் கமால் நாசர் (வயது 35) என்ற பயணி தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் அவரை வழிமறித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது, அவரது உள்ளாடையில் தைக்கப்பட்டிருந்த பையில் 1.233 கிராம் எடையுள்ள பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்ததில், அதற்குள் 1.530 கிராம் எடையுள்ள தங்கம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார்.
அதே நாளில் கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்த மதுரையைச் சேர்ந்த சையது அபுதாஹிர் (வயது 38) என்ற பயணியிடம் நடத்திய சோதனையில், அவரது உள்ளாடையில் தைக்கப்பட்டிருந்த பையிலிருந்த பொட்டலத்தில், 1.236 கிராம் எடையுள்ள தங்கக்கட்டி இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார்.
மொத்தத்தில் 2.766 கிலோ எடையுள்ள ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டு இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...