காரில் பயணிக்கிற அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
காரில் பயணிக்கிற அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என மத்தியபோக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்தியபோக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கார்களில் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் ஆக்கப்படுவதாக தெரிவித்தார். காரில் பயணிக்கிற அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட்டுகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதை கட்டாயம் ஆக்கும் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் என்றும், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய விதி எப்போது அமலுக்கு வரும் என்பதை மந்திரி நிதின் கட்காரி குறிப்பிடவில்லை.
தற்போது கார்களில் ஓட்டுனர் அவர் அருகே அமர்ந்து பயணிப்பவர், பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கு சீட் பெல்ட் வசதி உள்ளது. இனிமேல் பின் இருக்கையில் மத்தியில் அமர்பவர்களுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்படுகிறது. தற்போது பெரும்பாலான கார்களில் 2 பாயிண்ட் சீட் பெல்ட் பயன்படுத்தப்படுகிறது.
விமானத்தில் பயன்படுத்துவது போன்று ஆங்கில எழுத்தான ஒய் வடிவ சீட் பெல்ட்தான் அனைத்து இருக்கைகளிலும் பொருத்த வேண்டும் என்பது கட்டாயம் ஆகிறது. இதனால் கார் பயணம் பாதுகாப்பானதாக ஆகி விடும் என கருதப்படுகிறது.
Leave your comments here...