‘லவ் ஜிகாத்’துக்கு 10 ஆண்டு சிறை, இலவசமாக இருசக்கர வாகனம் , 2 சிலிண்டர் – உ.பியில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

அரசியல்

‘லவ் ஜிகாத்’துக்கு 10 ஆண்டு சிறை, இலவசமாக இருசக்கர வாகனம் , 2 சிலிண்டர் – உ.பியில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

‘லவ் ஜிகாத்’துக்கு 10 ஆண்டு சிறை, இலவசமாக இருசக்கர வாகனம் , 2 சிலிண்டர் – உ.பியில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லவ் ஜிகாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை; 1 லட்சம் ரூபாய் அபராதம், ராமாயண பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில், 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்திற்கு பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க பாஜக மும்முரமாக களப் பணியாற்றி வருகிறது.

இதன் ஒருபகுதியாக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், லவ் ஜிகாத் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் . உத்தர பிரதேச பாஜக அரசு கடந்த ஆண்டு உ.பி. சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்டம் 2020ஐ நிறைவேற்றியது.

நவம்பர் 28ஆம் தேதி அமலுக்கு வந்த இந்தச் சட்டத்தின்படி, ஒருவரை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் ₹ 15,000 அபராதமும் விதிக்கப்படும். 18 வயதுக்கு குறைந்தவர்களை மதமாற்றம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனை 10 ஆண்டுகளாகவும், அபராதம் ₹ 25,000 ஆகவும் நீட்டிக்கப்படலாம். கட்டாய மதமாற்றம் பெரிய அளவில் நடத்தப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் ₹ 50,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், கல்லுரி பெண்களுக்கு இலவச இருசக்கர வாகனம், 60 வயதை கடந்த முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம், ஏழை பெண்கள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் உதவி போன்ற அறிவிப்புகளும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்படுகிறது.

Leave your comments here...