பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: இன்று தொடங்குகிறது..!

ஆன்மிகம்இந்தியா

பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: இன்று தொடங்குகிறது..!

பிரசித்தி பெற்ற  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: இன்று தொடங்குகிறது..!

பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் இடம் பிடித்து உள்ளது.

இந்த கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) காலை 10.50 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தல் சடங்குடன் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு 17-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. கேரளாவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கடந்த ஆண்டைப்போல், கோவில் வளாகத்தை சுற்றி 200 பக்தர்களுக்கு மட்டுமே பொங்கலிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற பக்தர்கள் அவரவர் வீட்டின் முற்றங்களில் பொங்கலிட தடையில்லை. அன்றைய தினம் காலை 10.50 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்கும். மதியம் 1.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் நடைபெறும்.

11-ந் தேதி காலை 8.30 மணிக்கு குத்தியோட்ட விரதம் தொடங்குகிறது.. விழா நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 6.05 மணிக்கு தீபாராதனை 6.40 மணிக்கு உஷபூஜை, 6.50 மணிக்கு உஷ ஸ்ரீபலி, 7 மணிக்கு களபாபிஷேகம், 8.30 மணிக்கு பந்தீரடி பூஜை, 11.30 மணிக்கு உச்ச பூஜை, பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 உச்ச ஸ்ரீபலி, 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் 6.45 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாள பூஜை, 9.30 மணிக்கு அத்தாள ஸ்ரீபலி, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, அதன்பிறகு நடை அடைக்கப்படும்.

பொங்கல் வழிபாடு நடைபெறும் 17- ந் தேதியன்று சிறுமிகளின் தாலப்பொலி, சிறுவர்களின் குத்தியோட்டம், அம்மன் ஊர்வலம் ஆகியவை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும். மறு நாள் இரவு காப்பு அவிழ்க்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

விழாவையொட்டி, ஆண்டு தோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவையொட்டி வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை எந்த வித குறைபாடுகளும் இன்றி செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...