கோயில் யானைகளை கடுமையாக நடத்தக் கூடாது – கோயில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு..!
கோயில் யானைகளை கடுமையாக நடத்தக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
* யானைகள் அன்புடன் நடத்தப்பட வேண்டும். யானைகளை கடுமையாக நடத்தப்படுவது கண்டிப்பாக கூடாது.
* கோயில் யானைகளை அன்புடன் நடத்தப்பட வேண்டும். யானைகளை கடுமையாக நடத்தப்படுவது கண்டிப்பாக கூடாது.
* யானைகளின் வாலைப் பிடித்து இழுப்பது போன்ற குறும்பு செயல்களை கண்டிப்பாக செய்தல் கூடாது.
* இயற்கையாக பராமரிக்கப்பட வேண்டுமே தவிர யானைகளின் மீதுள்ள முடிகளை அகற்றுவது போன்ற இயற்கைக்கு மாறான செயல்களை செய்வது கண்டிப்பாக கூடாது.
* கோயில்களில் நடைபெறும் பூஜை மற்றும் திருவிழாக்கள் தவிர பிற எவ்வித காரியங்களுக்கும் யானைகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
* யானைகள் கோயில் வளாகத்தில் இருக்கும் போது பக்தர்கள் தங்கள் விருப்பம் போல் உணவுப்பண்டங்கள் வழங்குவது தடை செய்ய வேண்டும்.
* பக்தர்கள் உணவுப் பண்டம் வழங்க விரும்பினால் அதற்கான தொகையை யானைப் பராமரிப்பிற்கென உண்டியலில் செலுத்த கேட்டுக் கொள்ள வேண்டும்.
* காலமுறை மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
* நோய் அறிகுறியோ, நோயோ இருப்பின் அதற்கான மருத்துவ சிகிச்சையை உடனடியாக துவங்க வேண்டும்
* மது அருந்துவோர் போன்றோரை தகோயில் வளாகத்திலோ, யானையின் அருகிலோ கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
* யானைப் பாகன்கள் ஒழுக்கமானவர்களாகவும், நன்னடத்தை உள்ளவர்களாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* யானைகளை புகைப்படம் எடுப்பது யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
* யானைகளின் அருகில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது.
* வான வேடிக்கைகள், மிகுந்த ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பயன்படுத்தும் இடம் அதிகம் சத்தம் விளைவித்து யானைக்கு எரிச்சலூட்டும் இடங்கள் ஆகிய பகுதிகளில் யானைகளை அழைத்துச் செல்லக் கூடாது.
* மின் சாதனங்கள், மின் கம்பிகள், மின் இணைப்புகள் போன்ற மின் பகுதிகளின் அருகில் யானையை கண்டிப்பாக அழைத்துச் செல்லக் கூடாது.
* பொதுவாக யானைகள் விரும்பாத எவ்வித செயல்களையும் கண்டிப்பாக செய்தல் கூடாது.
* கோயில்கள் மற்றும் திருமடங்களின் யானைகளுக்கு கால்நடை மருத்துவரால் மருத்துவ பரிசோதனை 15 தினங்களுக்கு ஒருமுறை அதாவது மாதத்தின் 15 நாட்கள் மற்றும் 30 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் யானையின் பரிசோதனைக்கு வரப்பெறும் மருத்துவரது வருகை மற்றும் அவரது சிகிச்சை பரிந்துரைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு பேணி பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...