பண மோசடி வழக்கு : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை..!
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2001 – 2006-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருந்ததாக 2006-ல்ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இதைத்தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டம்,1988ன் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிந்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்நிலையில், தற்போது 14.5.2001 முதல் 31.03.2006 வரையிலான காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வாங்கிய சொத்துக்கள், அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்துக்கள் என சுமார் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Leave your comments here...