கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கட்டாயம் சட்டம் கொண்டுவர வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்.!
பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பஞ்சாப் ஜலந்தர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கெஜ்ரிவால் பேசுகையில், மதம் தனிநபர் உரிமை சம்மந்தப்பட்டது. கடவுளை வழிபட அனைவருக்கும் உரிமை உள்ளது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கட்டாயம் சட்டம் கொண்டுவர வேண்டும். ஆனால், அதனால் யாரும் தவறாக துன்புறுத்தப்படக்கூடாது. பயம் காட்டி கட்டாய மதமாற்றம் செய்தது தவறு’ என்றார்.
Leave your comments here...