மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் குறைப்பு..!
ஒவ்வொரு மாநிலங்களும் காவல்துறைக்கு பணிநேரம், ஊதியம் போன்றவற்றை தாங்களே தீர்மானித்துக்கொள்கின்றன. பொதுவாகவே காவல்துறையில் பணிச் சுமை அதிகமாக உள்ளது என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. அவர்களுக்கு உரியமுறையில் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. பணிநேரம் அதிகமாக வேலைவாங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன.
இந்தநிலையில், மகாராஷ்டிராவில் பெண்களுக்கான வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில காவல்துறைத் தலைவர் சஞ்சய் பாண்டே வெளியிட்ட உத்தரவில், ‘ஆண் மற்றும் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருக்கும் நிலையில், தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
உத்தரவின்படி, சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது. அவசர காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் அவர்களுக்கான பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம் எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...