முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தர்..!
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.பி.என். சிங் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆர்.பி.என். சிங்கின் விலகல் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அவர் பா.ஜ.க.வில் சேர உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இது எனக்கான புதிய தொடக்கம். பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டியின் கீழ் தேச கட்டமைப்பில் நானும் பங்காற்றும் முனைப்பில் உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு சென்றார். அவர், மத்திய மந்திரிகள் அனுராக் தாகுர், தர்மேந்திர பிரதான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களது முன்னிலையில் பா.ஜ.க.வில் சிங், தன்னை இணைத்து கொண்டார்.
Leave your comments here...