கேரள அரசின் லாட்டரியில் ரூ.12 கோடி வென்ற பெயிண்டிங் தொழிலாளி..!

இந்தியா

கேரள அரசின் லாட்டரியில் ரூ.12 கோடி வென்ற பெயிண்டிங் தொழிலாளி..!

கேரள அரசின் லாட்டரியில் ரூ.12 கோடி வென்ற பெயிண்டிங் தொழிலாளி..!

கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி உள்ளது. கேரள அரசு தரப்பிலும் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரூ.12 கோடி பரிசுத்தொகை கொண்ட கேரள அரசின் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது.

சீட்டு ஒன்று ரூ.300 க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த லாட்டரி சீட்டு அமோகமாக விற்பனையானது. 2-வது பரிசாக ரூ.3 கோடி (6 லாட்டரிகளுக்கு) 3-வது பரிசாக 60 லட்சம் (6 லாட்டரிகளுக்கு) வழங்கப்படும் என விற்பனையானது. முதலில் 24 லட்சம் லாட்டரி சீட்டுக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட நிலையில், அனைத்தும் விற்று தீர்ந்ததால், கூடுதல் லாட்டரிகள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்தன.

இந்த நிலையில், 6 கோடி பரிசுத்தொகையை கோட்டயம் பகுதியை சேர்ந்த சதானந்தம் என்ற அதிர்ஷ்டசாலி தட்டிச்சென்றுள்ளார். ரூ. 6 கோடி பரிசுத்தொகையை கொண்டு தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செலவிடப்போவதாக சதானந்தம் தெரிவித்துள்ளார். சதானந்தம் கட்டிடடங்களுக்கு வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

Leave your comments here...