பாதுகாப்பு குளறுபடி : பிரதமர் மோடி நலமுடன் வாழ வேண்டி புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவில் மத்திய அமைச்சர் பிரார்த்தனை

இந்தியா

பாதுகாப்பு குளறுபடி : பிரதமர் மோடி நலமுடன் வாழ வேண்டி புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவில் மத்திய அமைச்சர் பிரார்த்தனை

பாதுகாப்பு குளறுபடி : பிரதமர் மோடி நலமுடன் வாழ வேண்டி புகழ்பெற்ற  ஹாஜி அலி தர்காவில் மத்திய அமைச்சர் பிரார்த்தனை

பிரதமர் நரேந்திர மோடி நலமுடன் வாழ வேண்டி மும்பை ஹாஜி அலி தர்காவில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி நேர்ந்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அவருக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை நடத்தப்படுகிறது.

கடந்த புதன் கிழமையன்று பஞ்சாபுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதாக இருந்தார். வானிலை காரணமாக அவரது பயணம் ஹெலிகாப்டரில் செல்வதில் இருந்து சாலை மார்க்கத்திற்கு மாற்றப்பட்டது. பதிண்டாவில் அவர் செல்லும் வழியில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் சாலைகள் அடைக்கப்பட்டன.

இதன் காரணமாக பிரதமர் மோடி தனது பாதுகாவலர்களுடன் பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாபில் இருந்து திரும்பும்போது விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் பேசினார். அப்போது, தன்னை உயிருடன் திருப்பி அனுப்பியதற்காக பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என்று அதிகாரிகளிடம் கூறியதாக தகவல் பரவியது.

இந்த நிலையில், நடந்த பாதுகாப்பு குளறுபடிகளுக்கு பஞ்சாப் அரசே காரணம் என்று கூறி, நாட்டின் பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரம் பிரதமர் மோடி நலமுடன் வாழ்வதற்காக சிறப்பு பிரார்த்தனைகள் வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் முமபையில் புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பிரதமர் மோடிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-


பிரதமர் மோடி நலமுடன் வாழ்வதற்காக ஹாஜி அலி தர்காவில் பிரார்த்தனை செய்தோம். பஞ்சாபில் மோடிக்கு ஏற்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அங்கு நடந்தது ஜனநாயகத்திற்கு எதிரான சதி. இதற்கான தண்டனையை பஞ்சாப் மக்கள் எதிர்வரும் தேர்தலில் கொடுப்பார்கள். பிரதமர் மோடிக்கு எதிராக பஞ்சாபில் நடந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியே காரணம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave your comments here...